1000

பரிசோதனை ஸ்கானரை பார்வையிட்ட கோட்டா!

பரிசோதனை ஸ்கானரை பார்வையிட்ட கோட்டா!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பரிசோதனை ஸ்கானரின் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ஆய்வு செய்தார்.

விமான நிலையத்தில் சுங்கப்பிரிவில் நிறுவப்பட்டுள்ள இந்த ஸ்கானர், மறைத்து வைத்திருக்கும் போதைப் பொருட்களை உடல் பரிசோதனை இல்லாமலே கண்டறியும்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு கோட்டாபய நாடு திரும்பினார். இதன்போது, அந்த ஸ்கானர் வழியாக ஜனாதிபதி குழுவினரின் பயணப்பொதிகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

இதன்போது, ஸ்கானரின் செயற்பாடுகளையும் கோட்டாபய பார்வையிட்டார்.
ஆசிரியர் - Shabesh