ராக்கெட் பாகத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயம்

ராக்கெட் பாகத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயம்
புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயமானதாகக் கூறப்படும் நிலையில், மீன வர்களிடம் இஸ்ரோ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திங்கட்கிழமை(டிச.1) அதிகாலையில் வம்பா  கீரப்பாளையம் கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் செயற்கை கோளை  விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராட்சத மோட்டார் பாகம் சிக்கியது. 1,600 கிலோ எடை கொண்ட இந்த  மோட்டாரை மீனவர்கள் பலர் ஒன்று சேர்ந்து கரைக்கு  கொண்டு வந்து சேர்த்தனர். தகவலறிந்து காவலர்கள்,  வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்து அது ராக்  கெட்டின் ஒரு பாகம்தான் என்பதை உறுதி செய்தனர். அதில் இருந்து வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் ஒன்றை அகற்றிய அதிகாரிகள், அதன் மற்றொரு  பாகத்தை காணவில்லை எனத் தெரிவித்தனர். வெடிக்  கும் தன்மை கொண்ட ஆபத்தான பாகம் என்பதால்  அதனை யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுமாறும்  எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து மீனவர்களிடம் இது  குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராக்கெட் மோட்டாரை லாரி  மூலம் அங்கிருந்து கொண்டு செல்ல இஸ்ரோ அதி காரிகள் முற்பட்டனர். அப்போது சட்டமன்ற உறுப்பி னர் அன்பழகன் தலைமையில் வந்த மீனவர்கள், சேத மடைந்த தங்களது வலைகள் மற்றும் படகு களுக்கான இழப்பீட்டை கொடுத்துவிட்டு அதிகாரிகள்  உதிரி பாகத்தை எடுத்துச் செல்லட்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ஆசிரியர் - Editor