பொலிஸ்நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! மர்மம் என்ன ??

பொலிஸ்நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! மர்மம் என்ன ??

ஜா - எல பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை பரிசோத்து கொண்டிருந்த போது அது தவறுதலாக இயங்கியுள்ளது.

இதன் காரணமாக சிறைவைக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்வையிட வருகைதந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கால் பாதத்தில் காயமேற்பட்டுள்ளதாகவும் அவர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor