மக்களுக்கான திட்டங்கள்பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-

மக்களுக்கான திட்டங்கள்பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டசெயற்திட்டங்கள் பயன்பாடின்றி கைவிடப்பட்டிருப்பதைஎந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை இன்று (06.12.2019)மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பொருளாதாரமத்திய நிலையத்தை சென்று பார்வையிட்டதை தொடர்ந்துமேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த வர்த்தக சங்கப்பிரதிநிதிகளுடன் குறித்த வர்த்தக மையம் பயன்படுத்த்படாமல்இருப்பதற்கான காரணங்களை கேட்டறிந்து கொண்டஅமைச்சர் அவர்கள், வர்த்தகர்கள் எதிர்கொள்ளக் கூடியஅசௌகரியங்களை எழுத்து மூலம் வழங்குமாறும் அவற்றில்நியாயமான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துநடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் உறுதி அளித்தார்.

சுமார் 292 மில்லியன் ரூபாய் செலவில் பிராந்தியபொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமைக்கப்பட்டகுறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமாணப்பணிகள் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது இன்னும் மக்கள் பயன்பெறும் வகையில்செயற்படுத்தபடாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் - Editor