வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்
வடமாகாண மக்களுக்கான பயணிகள் சேவையை இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து செயற்திறன்மிக்கதாக வழங்கும் நோக்கோடு எதிர்வரும் 12 ஆம் திகதி வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்  தலைவர் திரு க. செவ்வேள் அவர்கள் தெரிவித்தார். 

வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்து சங்கங்களினது பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது இரு சபைகளும் இணைந்து பயணிகளுக்கான சிறந்த சேவையை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாக ஆராயப்படவுள்ளது. 

மேலும், இவ்விரு சபைகளும் இணைந்து சேவையை வழங்குவதற்கான பொது நேர அட்டவணை ஒன்றும் தயாரிக்கப்படவுள்ளதாக வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்விரு போக்குவரத்து சபைகளுக்குமிடையில் உள்ள நடைமுறைப்பிரச்சனைகள் தொடர்பில் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்  மற்றும்; இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளருக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


ஊடகப்பிரிவு
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை 
வடமாகாணம்
ஆசிரியர் - Editor