இறுதிக் கட்ட பிரசாரத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள்

இறுதிக் கட்ட பிரசாரத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள்

இங்கிலாந்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தை மும்முரமாக மேற்கொண்டு தங்கள் தேர்தல் உறுதிமொழிகளை வாக்காளர்களுக்குத் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொன்சர்வேற்றிவ் கட்சியின் (Conservative Party) தலைவர் போரிஸ் ஜோன்சன், வியாழக்கிழமை வாக்கெடுப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரெக்சிற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கான தேர்தல் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், அவுஸ்ரேலியவின் குடியேற்ற முறை அடிப்படையிலான குடியேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் கொன்சர்வேற்றிவ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இதனிடையே, தொழிற் கட்சியின் (Labour Party) தலைவர் ஜெரமி கோர்பின், இந்தத் தேர்தல் நம்பிக்கைக்கு வாக்களிக்கும் வாய்ப்பு என்றும் பல தசாப்தங்களுக்கான இலக்கை நோக்கி நம் நாட்டை மாற்றும் பெரும் இலட்சியத் திட்டம் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும். வயதானவர்களுக்கு இலவசமாக தனிப்பட்ட பராமரிப்பை வழங்க, 2023-2024 இற்குள் 10 பில்லியன் டொலர் கூடுதல் நிதியில் ஒரு தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தவதன் மூலம் சமூக பாதுகாப்பு நெருக்கடியை போக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. இதனைவிட லண்டனுக்கு வெளியே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 50 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும் எனவும் இக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,  ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி (Scottish National Party) தலைவர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் ஸ்கொற்லாந்தின் எதிர்காலம் இந்த தேர்தலால் ஆபத்தில் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

எனவே, பிரெக்ஸிற்றில் இருந்து தப்பிக்கவும், ஸ்கொற்லாந்தின் எதிர்காலத்தை ஸ்கொற்லாந்தின் கைகளில் கொடுக்கவும் தனது கட்சியை ஆதரிக்குமாறு அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, எங்கள் நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான வரலாற்று முதலீட்டு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக என்று லிபெரல் கட்சி (Liberal Democrats) தெரிவித்துள்ளது.

மேலும், லண்டனுக்கு வெளியே உட்கட்டமைப்பிற்கான அதன் பிராந்திய மறுசீரமைப்பு திட்டம், மின்சார ரயில் சேவைகள் அபிவிருத்தி, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் நிலையங்களை அதிகரித்தல் என்பவற்றுடன் இணைய புரோட்பான்ட் (broadband) அணுகலை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நன்றி: BBC

ஆசிரியர் - Editor