இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை

இலங்கையின் தென்கிழக்கில் குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக நாடு முழுவதும்- குறிப்பாக கிழக்கு, ஊவா, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மதியம் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மொனராகலை, பொலன்னருவை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 200 மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம். அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சுமார் 100-150 மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம். காலி, களுத்துறை, இரத்னபுரி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 75-100 மி.மீ. மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

வடமேற்கு, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் (40-50) கி.மீ வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர் - Editor