இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் இன்று

இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் இன்று

இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது.


இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல செயற்படுகின்ற நிலையில், அதன் செயலாளராக நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.

ஆசிரியர் - Editor