வவுனியா பேருந்து நிலைய சிக்கலிற்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வவுனியா பேருந்து நிலைய சிக்கலிற்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வுனியாவில் நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து சபைக்கிடையிலான பிரச்சனைக்கு இன்று தீர்வு எட்டப்பட்டது. இதன்படி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின்படி படி சேவையில் ஈடுபட இரண்டு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.

வவுனியா போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று (9) வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அரச அதிபர், அரச, தனியார் போக்குவரத்து துறை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், நாளை (10) முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரு தரப்பும் இணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரியர் - Editor