மருந்துகள் திருட்டு - காவல்துறை விசாரணை தீவிரம்..!

மருந்துகள் திருட்டு - காவல்துறை விசாரணை தீவிரம்..!

நீர்கொழும்பு வைத்தியசாலையின்  மருத்துவ ஆய்வு கூடத்திலிருந்து 05 இலட்சம் பெறுமதியான மருந்துகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

டெங்கு நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் என் எஸ் வன் ஸ்ட்ரிக் எனப்படும் மருந்துகளே திருடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதான ஆய்வுகூட அதிகாரி சுஜீவா  பெர்ணாண்டோ தெரிவிக்கின்றார்.,

இதனடிப்படையில் தாம் நீர்கொழும்பு காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்,

ஆய்வுகூடத்தில் காணப்பட்ட 25 ஸ்ட்ரிப்கள் வீதம் அடங்கிய 33 பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor