ராணியை அவமதித்த புதிய எம்.பி

ராணியை அவமதித்த புதிய எம்.பி

பிரித்தானியாவில் பதவி ஏற்கும் போது ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர், ராணியை அவமதிக்கும் வகையில் விரல்களை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரித்தானியா பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து எம்.பி.க்களும் சட்டப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும், இதன் போது அவர்கள் “இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் அரசு குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்போம் எனவும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

கோட்ரிட்ஜ், கிறிஸ்டன் மற்றும் பெல்ஷில் தொகுதிக்கான புதிய எம்.பி ஸ்டீவன் பொன்னர், இந்நிகழ்வின் போது நுட்பமாக ராணிக்கு எதிர்ப்பை காட்டினார்.

பின்னர், தான் பதவியேற்ற புகைப்படத்துடன் ஸ்டீவன் ட்விட் செய்தார். ஆனால், அந்த படத்தில் அவரது கை பகுதி இடம்பெறவில்லை.

நாங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக பணியாற்ற இருக்கிறோம். கோட்ரிட்ஜ் கிறிஸ்டன் மற்றும் பெல்ஷில் எம்.பி.யாக நான் பதவியேற்றுள்ளேன்.

ஸ்காட்லாந்து பிரித்தானியாவிற்குள் இருக்கும் வரை எனது திறனுக்கேற்ப அனைத்து அங்கத்தினருக்கும் சேவை செய்ய நான் எதிர்நோக்குகிறேன் என ஸ்டீவன் பொன்னர் ட்விட்டரில் கூறினார்.

ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சியை சேர்ந்த எம்.பி. ஸ்டீவன் பொன்னர் ராணியை அவமதித்ததாக டோரி எம்.பி. ஆண்ட்ரூ பிரிட்ஜன் குற்றம் சாட்டினார்.


எஸ்.என்.பி எம்.பி.க்களின் சில செயல்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும், எனவே இது ஒரு ஆச்சரியமாக இல்லை. ஆனால் இது மிகவும் புத்திசாலித்தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இது ராணியை அவமதிப்பதாகும், இது பாராளுமன்றத்தை அவமதிக்கிறது, எஸ்.என்.பி சபையின் மீது மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஸ்டீவனை கடுமையாக விமர்சித்த ட்விட்டர் பயனர்கள், விரலை அவ்வாறு வைத்திருந்தது குறித்து ஸ்டீவனும், ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிவருகின்றனர்.

ஆசிரியர் - Editor