சுவிட்சர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நால்வர்:

சுவிட்சர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நால்வர்:

இத்தாலிய சட்டவிரோத கும்பலுடனும் பயங்கரவாத குழுக்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி சுவிட்சர்லாந்தில் இருந்து நால்வரை நாடுகடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் புகலிடக் கோரிக்கையாளர்கள் 2,000 பேரை சுவிஸ் நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ல் முதன் முறையாக இத்தாலிய சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி சுவிட்சர்லாந்தில் இருந்து இருவரை நிர்வாகம் நாடுகடத்தியது.

மேலும், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்த இருவரையும் சுவிஸ் நிர்வாகம் நாடுகடத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை குறிப்பிட்ட காரணங்களால் சுவிஸ் நிர்வாகம் மொத்தம் 23 நபர்களை நாடுகடத்தியுள்ளது.

இந்த நாடுகடத்துதல் முடிவுகள் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்தவை எனவும், இதற்கு முன் அவர்கள் குற்றாவாளிகள் என நிரூபித்திருக்க தேவையில்லை எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,196 புகலிடம் கோரும் கோப்புகளை, அவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளனர்களா என்பதை சுவிஸ் நிர்வாகம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அதில் 25 கோரிக்கைகளை பாதுகாப்பு காரணங்களால் நிராகரிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor