அநாதரவாக கிடந்த பச்சிளங்குழந்தை

அநாதரவாக கிடந்த பச்சிளங்குழந்தை

சுவிட்சர்லாந்தில் கட்டுமான பணியிடம் ஒன்றில் பச்சிளங்குழந்தை அநாதரவாக கிடந்த நிலையில், அதன் தாயை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை, Därstetten பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிலர் குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்தபோது, அப்போதுதான் பிறந்த குழந்தை ஒன்று அருகிலிருந்த கட்டிடம் ஒன்றில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

பதறிப்போய் பொலிசாரிடம் அவர்கள் தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த குழந்தையை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தாயின் கருப்பைக்குள் கதகதப்பான சூழலில் இருந்த குழந்தை, பிறந்ததும் இரவெல்லாம் தனிமையில் விடப்பட்டதால், குளிரால் அதற்கு hypothermia பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அந்த குழந்தையின் தாயை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

யாருமின்றி தனிமையில் அந்த குழந்தையை பிரசவித்ததாக தெரிவித்த அந்த பெண், யாராவது தனது குழந்தையைக் கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளட்டும் என்பதற்காகத்தான் அந்த அறையில் போட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆசிரியர் - Editor