இரண்டு நாய்களை ஆற்றில் வீசி கொன்ற தம்பதி

இரண்டு நாய்களை ஆற்றில் வீசி கொன்ற தம்பதி
சுவிட்சர்லாந்தில் இரண்டு நாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.

Aare ஆற்றுக்கு தாங்கள் வளர்த்த இரண்டு நாய்களை கொண்டு சென்ற தம்பதி அதன் கழுத்தில் இரும்பு பைப்பை கட்டி ஆற்றில் தூக்கி வீசி கொன்றுள்ளார்கள்.

இதையடுத்து மிருகவதையில் ஈடுபட்டதாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் Aargau மண்டல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

நாய்கள் குரைப்பது மற்றும் அதன் மீது வரும் நாற்றம் காரணமாகவே இச்செயலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் கூறியுள்ளார்.தம்பதியின் செயலை கண்டித்து போராட்டகாரர்கள் நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்ட குழுவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இவ்வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாங்கள் இங்கு கூடவில்லை, தம்பதி செய்த விடயம் வெளியில் தெரியவேண்டும் எனவே கூடினோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கணவரை 20 மாதங்கள் கண்காணிக்கவும், நான்கு ஆண்டுகள் நன்னடத்தை பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மனைவியை 16 மாதங்கள் கண்காணித்து சோதிக்க உத்தரவிட்ட நீதிபதி, தம்பதி 3000 பிராங்குகள் அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor