1000

மாஸ் காட்டிய விக்ரம்!

மாஸ் காட்டிய விக்ரம்!

தமிழ் திரையுலகில் திறமையான கலைஞர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர். ஒரு படத்திற்காக அவர் எடுக்கும் முயற்சியும், உழைப்பும் மிக அதிகம். விருதும், வரவேற்பும் அவருக்கு கிடைத்த வெகுமதி.

அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று ஐ. சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் இதே நாள் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 2015 ம் ஆண்டில் வெளியானது.

கூன் விழுந்தது போன்ற உடலும், அடையாளம் தெரியாத வயோதிக தோற்றமும் கொண்டு விக்ரம் மிரட்டலாக நடித்திருந்தார். எமிஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், யோகி பாபு என பலர் நடித்திருந்தனர்.

தற்போது 5 ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டிவிட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் #5YrsOfMegaBBஐMovie என டேக் போட்டு ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இது தேசிய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.

ஆசிரியர் - Editor