இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மீது அமர்ந்திருந்த நாய்

இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மீது அமர்ந்திருந்த நாய்

சுவிட்சர்லாந்தின் நாய்கள் பயிற்சி மையம் ஒன்றில் பெண் ஒருவர் இறந்து கிடந்த நிலையில், அவர் வளர்த்த நாயே அவரை கடித்துக் குதறி கொன்றது தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Auboranges பகுதியில் உள்ள நாய்கள் பயிற்சி மையம் ஒன்றில், 45 வயதுடைய பெண் ஒருவர் இறந்துகிடப்பதையும், அவர் மீது அவரது நாயே ஏறி நிற்பதையும் கண்ட ஊழியர்கள் பொலிசாரை அழைத்துள்ளனர்.

பொலிசார் அந்த பெண்ணின் உடலை நெருங்க முயன்றபோது, அந்த நாய் ஆக்ரோஷமாக பொலிசார் மீது பாய்ந்துள்ளது.

அத்துடன் அந்த நாய், பெண் பொலிசார் ஒருவர் மீது பாய்ந்து, அவரைக் கடித்துக் குதறியுள்ளது.

உடனே அவரது சக பொலிசார் ஒருவர் அந்த நாயை சுட்டுக் கொன்றுள்ளார்.

முதலில் அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூறு ஆய்வில், அந்த நாயே அதன் உரிமையாளரான அந்த பெண்ணைக் கடித்துக் குதறி கொன்றுள்ளது தெரியவந்தது.

பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர் - Editor