1000

ரஞ்சன் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

ரஞ்சன் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor