1000

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில்

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில்

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது.

குறித்த பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் காணப்படுவதுடன், மேலும் உலகில் தடை செய்யப்பட்ட 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனி நபர்களும் தடை செய்யப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பவர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor