ராஜித சேனாரத்னவிடம் விசாரணை

ராஜித சேனாரத்னவிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (14) மதியம் 12 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

ஆசிரியர் - Editor