13 பிளஸ் விடயத்தில் நான் முன்னைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்

13 பிளஸ் விடயத்தில் நான் முன்னைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்

13 பிளஸ் விடயத்தில் நான் முன்னைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன். தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லையென்ற நிலைப்பாடு அரசின் நிலைப்பாடல்ல. ஐ.தே.கவின் ஆட்சியில் மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை. எமது ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒத்துழைக்காமல் ஏமாற்றினர். ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆட்சி செய்தனர். ஆனால், வாக்களித்த தமிழ் மக்களிற்காக எதுவும் செய்யவில்லை. பிள்ளைகளையிழந்த மக்கள் போராடிய போது, அவர்களை இறங்கி வந்து பார்க்காமல் காரில் சென்றார்கள் என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிற்கான பிரச்சனை தீர்வு இந்தியாவில் இருப்பதாக வடக்கு தமிழ் பத்திரிகைகள் தலைப்பிடுகின்றன. எமது பிரச்சனைக்கான தீர்வு எம்மிடமிருந்தே வர வேண்டும். உள்நாட்டுக்குள்ளேயே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

பத்திரிகைகள் எம்மை பிரிக்கும் விதமாக தலைப்பிட கூடாது. எமக்கு வாக்களித்தவர்களிற்காகவும், வாக்களிக்காதவர்களிற்காகவும் நாம் செயற்படுவோம்.

இம்முறை அழுத்தங்கள் இருக்காது என நினைக்கிறோம். 2021ம் ஆண்டிலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதற்குள் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி ஒரு மடிவுக்கு வருவோம்.

13 பிளஸ் விடயத்தில் நான் முன்னைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன். தமிழ் மக்களை, தமிழ் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஐ.தே.கவின் ஆட்சியில் மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை. எமது ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒத்துழைக்காமல் ஏமாற்றினர். ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆட்சி செய்தனர். ஆனால், வாக்களித்த தமிழ் மக்களிற்காக எதுவும் செய்யவில்லை. பிள்ளைகளையிழந்த மக்கள் போராடிய போது, அவர்களை இறங்கி வந்து பார்க்காமல் காரில் சென்றார்கள்.

34 புலனாய்வு உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய அறிக்கை கோரயுள்ளோம். எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களின் குற்றச்சாட்டு, பாரதுரமான குற்றச்சாட்டு

தேசியகீதம் எந்த மொழியிலும் பாடப்படலாம் என்பதே அரசின் நிலைப்பாடு. தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என சிலர் அரசியல் நோக்கத்திற்காக கூறியிருக்கலாம். ஆனால் அரசு கூறவில்லை. தமிழ் பகுதிகளில் தமிழில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது. அதற்கு நான் உள்ளிட்ட எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறோம். பல மொழி பேசும் நாடுகளில் பல மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது. பல மொழிகளில் பாடப்பட்டாலும் ஒரே விடயம்தான் பாடப்படுகிறது“ என்றார்.

ஆசிரியர் - Editor