சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது

சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வுட் போற்றி கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேரை நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (15) விடியற்காலை 01 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வுட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் கல் உடைக்கும் ஆயுதம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும் பொகவந்தலாவ கொட்டியாகலை, கிலானி சீனாகலை, செல்வகந்த ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் பாரிய அளவில் இந்த மாணிக்ககல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

ஆசிரியர் - Editor