நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தலகொட குளத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) மாலை 4.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவத்தகம பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor