பொங்கல் பானை சின்னத்தை அறிவித்தார் விக்கி!

பொங்கல் பானை சின்னத்தை அறிவித்தார் விக்கி!

தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை என்பதை அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாழ் தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor