1000
590

ஹெரோயினுடன் 4 பேர் கைது

ஹெரோயினுடன் 4 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு பேர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ, எம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் 13 கிராம் 480 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மான்னகடவல பிரதேசத்தை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கல்கிஸ்ஸ பெலேன்கட சந்தியில் இரண்டு கிராம் 400 மில்லிகிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் நிட்டம்புவ கன்னதொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 260 மில்லி கிராம் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor