1000
590

மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து!

மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து!

அளுத்கம பகுதியில் ரயில் கடவையினூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து பெலியத்த பகுதியை நோக்கி பயணித்த காலு குமாரி என்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor