1000
590

போடைஸ் மலை உச்சியில் தீ

போடைஸ் மலை உச்சியில் தீ

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலானது நேற்று (23) மாலை ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக அல்லது தீ பரவியுள்ளதா என்பது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது மலையகத்தில் காணப்படும் வரட்சியின் காரணமாக இனந்தெரியாதவர்களால் இது போன்று காட்டுபகுதிகளுக்கு தீ வைத்திருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

ஆசிரியர் - Editor