1000
590

யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்!

யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 9 பேரும் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேரும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எப்.எம் சேனாரத்ன யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட கே.கட்டுபிடிய மேல் மாகாண தென் பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor