1000
590

காணாமல்போன மீனவா்..! சடலமாக மீட்பு..

காணாமல்போன மீனவா்..! சடலமாக மீட்பு..

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் நேற்றய தினம் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தென்பகுதியிலிருந்து வருகைதந்து கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராக செயற்பட்டுவந்த மீனவர் ஒருவரே 

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .குறித்த நபர் கடந்த நான்குநாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் 

குறித்த வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார் . இந்த சடலத்தை கண்ட சக மீனவர் கிராம அலுவலரிடம் முறையிட்ட நிலையில் 

கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ரதிநாதன் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு 

தோணி மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாஎல பகுதியை சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என்பவராவார்.

ஆசிரியர் - Editor