பொலிசாரிடமே துப்பாக்கியை காட்டியதால் அதிர்ச்சி!

பொலிசாரிடமே துப்பாக்கியை காட்டியதால் அதிர்ச்சி!

சுவிட்சர்லாந்தில் ஒரு கூட்டம் ஆண்கள் இளம்பெண் ஒருவரை சூழ்ந்துகொண்டு தொந்தரவு செய்ய, அவள் சென்று தன் தந்தையிடம் புகார் செய்திருக்கிறாள்.

அவளது தந்தை Thurgau மாகாணத்திலுள்ள Kreuzlingen ரயில் நிலையத்திலிருந்த அவர்களிடம் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்.

உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

அதற்குள் பொலிசார் வர, அந்த முரடர்களின் கூட்டத்தில் ஒருவன், பொலிசாரை நோக்கி துப்பாக்கியை எடுத்து நீட்டியிருக்கிறான்.

பொலிசார் அந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

ஆனால், இதில் யார் மீதும் துப்பாக்கிக் குண்டு பாயவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆசிரியர் - Editor