கொரோனா வைரஸ் தொற்று இல்லாமலிருந்தும் நடுக்கடலில் தவிக்கும் சுவிஸ் குடிமக்கள் இருவர்!

கொரோனா வைரஸ் தொற்று இல்லாமலிருந்தும் நடுக்கடலில் தவிக்கும் சுவிஸ் குடிமக்கள் இருவர்!

பயணிகள் கப்பல் ஒன்றில் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, இரண்டு சுவிஸ் குடிமக்கள் உட்பட அந்த கப்பலிலிருக்கும் 3,700 பேரும் நடுக்கடலிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Diamond Princess என்று அழைக்கப்படும் அந்த கப்பல் இப்போது ஜப்பான் கடல் பகுதியில் நிற்கிறது.

அந்த பயணிகள் கப்பலில் பயணித்த 80 வயது பயணி ஒருவர் ஹொங்கொங் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அவருடன் பயணித்தவர்கள், கப்பல் ஹொங்ஹொங்கில் நிற்கும்போது இறங்கி ஹொங்கொங்கிற்குள் சென்றவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய வகையில் அறிகுறிகள் கொண்ட சுமார் 273 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது.

அவற்றில் 31 பேரின் பரிசோதனை முடிவுகள் மட்டுமே வெளியான நிலையிலேயே, 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 10 பேரும் உடனடியாக கப்பலிலிருந்து அகற்றப்பட்டு ஜப்பானிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் மனிதர்கள் உடலில் நோயை உருவாக்குவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால், மீதமுள்ளவர்கள் இன்னும் 14 நாட்களுக்கு கப்பலில்தான் இருக்க வேண்டியிருக்கும்.

எனவே, சுவிஸ் குடிமக்கள் இருவரும் இப்போதைக்கு வீடு திரும்ப வழியில்லை. டோக்கியோவிலுள்ள சுவிஸ் தூதரகம், ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor