மூடுவிழா கண்ட சுவிஸ் நிர்வாண உணவகம்

மூடுவிழா கண்ட சுவிஸ் நிர்வாண உணவகம்

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் முதன் முறையாக நிர்வாண உணவகம் ஒன்றை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் விடுதிகளை முன்னெடுத்து நடத்தி வரும் டியாகோ என்பவரே நிர்வாண விடுத்திக்கும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இவரது இந்த முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் இடையே ஆதரவும் இருந்தது. ஆனால் பொதுமக்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, நிர்வாண விடுதி திறக்க இருப்பது தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன்,

டியாகோவின் நோக்கம் நிர்வாண விடுதி மூலம் பாலியல் தொழிலாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மட்டுமின்றி, தமது கட்டிடத்தில் அதுபோன்ற ஒரு விடுதியை செயல்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் எனவும் அவர் டியாகோவை எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் தமது கனவு திட்டமான நிர்வாண விடுதியை கைவிட்டதாக டியாகோ அறிவித்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் பொதுவான மதுபான விடுதி ஒன்றை திறக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor