கோபமாக பேசிய நடிகை சோனம் கபூர்

கோபமாக பேசிய நடிகை சோனம் கபூர்

முன்னணி பாலிவுட் நடிகை சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி பெண்கள் பிரச்சனைகள் மற்றும் அரசியல் பற்றியும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் அவர்.


டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதுபற்றி எழுத்தாளர் சேத்தன் பஹத் ட்விட்டரில் ஒரு கருத்தை பேசியுள்ளார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபத்துடன் பேசியுள்ளார் சோனம் கபூர். “என் கணவரும் கூட அனுமன் சாலிசா படிக்கிறார். ஒருவரது ஆன்மீக நம்பிக்கை அரசியலில் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் ஹிந்து தான் ஆனால் liberal” என கூறியுள்ளார் சோனம் கபூர்.

ஆசிரியர் - Editor