சர்வதேச ஊடகங்களின் கவனம் ஈர்த்த தில்லி தேர்தல்!

சர்வதேச ஊடகங்களின் கவனம் ஈர்த்த தில்லி தேர்தல்!

 இந்திய ஊடகங்கள் மட்டு மல்லாது, சர்வதேச ஊடகங்களிலும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலித்துள்ளன. இந்தியாவின் தலைநகரான தில்லி யில், இந்தியாவின் ஆளுங்கட்சி யான பாஜக அடைந்துள்ள தோல்வி யை முக்கியமான ஒன்றாக குறிப் பிட்டுள்ளன. தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times), “பிரதமர் மோடியின் கட்சிக்கு பின்னடைவு” என தலைப்பிட்டுள் ளது. இந்த தேர்தலில், மத ரீதியான அடையாளங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த தையும்; தில்லியில் போராடுகிற வர்ளை சுட்டுக் கொல்லுங்கள் என்று அவரது அமைச்சர்கள் வெறுப்பைக் கக்கியதையும் ‘நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி யையும், மிக நிதானமான முறையில் பரிசீலித்துள்ள நியூயார்க் டைம்ஸ், “மோடியின் இந்து தேசியவாத கொள்கைகளில்- மென்மைப் போக்கை கையாளும் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார்” என்று குறிப் பிட்டுள்ளது. ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) பத்திரிகையா னது, “மோடியின் கட்சிக்கு அதிர்ச்சித் தோல்வி” என்று தலைப் பிட்டு இருப்பதுடன், கடந்த 5 ஆண்டு களில் பள்ளிக் கல்வி, மின்கட்ட ணம், சுகாதாரம் ஆகியவற்றில்  கெஜ்ரிவால் அரசு செய்த மாற்றங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பதிவு செய்துள்ளது. ‘அல் ஜசீரா’ (Al Jazeera) ஏடும், கெஜ்ரிவால் அரசின் 5 ஆண்டுகால செயற்பாடுகளுக்கான வெற்றி இது என்று கூறியுள்ளது.  ‘தி கார்டியன்’ (The Guardian) பத்திரிகையானது, “மத ரீதியாக வாக்குகளை ஒருங்கிணைப்பது என்ற பாஜக-வின் முயற்சி தோல்வி அடைந்தது” என குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor