அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அலுவலக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புறநகரான கிழக்கு அந்தேரியில் 3 மாடிகளை கொண்ட இந்த வணிக கட்டிடத்தில் 2வது மாடியில் அமைந்துள்ள ரோல்டா என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த ரோல்டா நிறுவனத்தின் சர்வர் அறையில் ஏற்பட்ட தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர் - Editor