மக்களோடு மக்களாக என்னைப்போல் எளிமையாகப் பழகுங்கள்

மக்களோடு மக்களாக என்னைப்போல் எளிமையாகப் பழகுங்கள்

 கட்சியையும் அதில் நீங்கள் வகிக்கும் தலைமைப் பொறுப்புகளையும் மறந்து மக்களோடு மக்களாக ஒன்றாக பேசுங்கள், பழகுங்கள் என்று  அதிமுக நிர்வாகிகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். 

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் அதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று 2வது நாளாகத் தொடர்ந்தது.

கூட்டத்தில் பேசிய பழனிசாமி கூறுகையில், “என்னதான் நான் ஒரு முதல்வர் என்றாலும் நான் என்றுமே ஒரு விவசாயி போலவே இருக்கிறேன். மக்களோடு மக்க ளாக எளிமையாகவே வாழ்கிறேன். 

“எங்காவது வெளியே செல்லும் போது பொதுமக்களைக் கண்டால் உடனடியாக காரை நிறுத்தி அவர்களுடன் பேசுகிறேன். 

“டீக்கடையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, டீ குடித்து பேசி மகிழ்ந்து இளைப்பாறுகிறேன்.

“அதுபோல நீங்களும் கட்சிப் பொறுப்புகளை மறந்து மக்களோடு மக்களாக எளிமையாகப் பழகுங்கள். அதுதான் முக்கியம்,” என்று முதல்வர் குறிப்பிட்டதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித் துள்ளன. 

ஆசிரியர் - Editor