News19 பேர் அடங்கிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (10) வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானியில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்காத நிலையில், 3 கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளன. வாக்களிப்பின் மூலம் பெறப்படும் 196 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை இணைக்கும் வகையில் 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்படுவதற்கு இலங்கை தேர்தல்கள் சட்டம் வழிவகை செய்துள்ளது. இம் முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மொஹமட் முஸம்மில் மர்ஜான் பளீல் கலாநிதி சுரேன் ராகவன் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சாகர காரியவசம் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மஞ்சுளா திஸாநாயக்க பேராசிரியர் ரஞ்சித் பண்டார பேராசிரியர் சரித ஹேரத் கெவிந்து குமாரதுங்க பேராசிரியர் திஸ்ஸ விதாரண பொறியியலாளர் யாதமுனி குணவர்தன டிரான் அலஸ் கலாநிதி சீதா அரம்பேபொல ஜயந்த கெட்டகொட ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவராசா கலையரசன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இதுவரை தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்கவில்லை. குறித்த கட்சிகளும் தமது உறுப்பினர்களை பெயரிடும் பட்சத்தில், விரைவில் அவற்றை வர்த்தமானி அறிவித்தலூடாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழக மாணவர்களுக்காக தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்

தமிழக மாணவர்கள்  மருத்துவப் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய வடமாநிலங்களைச் சேர்ந்த எட்டு மாணவர்கள்,  இரு மாணவி களின் புகைப்படங்களைச் சிபிசிஐடி போலிசார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள தாகவும் சிபிசிஐடி போலிசார் மேலும் கூறியுள்ளனர். 

நீட் தேர்வு விவகாரத்தில் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட  மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் முன்னதாகக் கைதாகினர்.

அவர்களிடம் நடத்திய விசா ரணையில், வடமாநில இளைஞர்கள்  தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரம் தெரியவந்துள்ளது.

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் நடந்த இந்த முறைகேடு இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. 

தேனி மருத்துவக்கல்லூரி மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த முறை கேட்டைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை நட வடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.  

இந்நிலையில், தேனி மாவட்ட சிபிசிஐடி போலிசார் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும் அவர்களது பெற்றோர், இடைத் தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் தொடர்பில்  சிபிசிஐடி போலிஸ் அதிகாரி விஜய குமார் தலைமையிலான தனிப்படை போலிசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சிபி சிஐடி தலைமை அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.

இந்தக் குறிப்புடன் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 மாணவர்களின் புகைப்படங்களையும்  வெளியிட்டுள்ளது.

இந்த மாணவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும் அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடி சென்னை அலுவல கத்துக்கு 9443884395 என்ற கைபேசி எண்ணிற்கு தெரிவிக்க லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

depccwcbcid@tn.gov.in என்ற இணையத்தள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் - Editor