சில்லறை வாங்குவது போல் ரூ.10,000 திருடிய ஈரானியர்கள் கைது

சில்லறை வாங்குவது போல் ரூ.10,000 திருடிய ஈரானியர்கள் கைது

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் நோட்டை மாற்றுவது போல் நடித்து வியாபாரியிடம் நூதனக் கொள்ளையில் ஈடுபட்ட  ஈரான் நாட்டு கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த வியாபாரி டேவிட்  என்பவரிடம் இரு  வெளிநாட்டு நபர்கள்   ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். வியாபாரி டேவிட் சில்லறை கொடுத்தனுப்பிய சிறிது நேரத்தில், அவர் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் காணவில்லை. இதனையடுத்து இருவரையும் போலிசார் கைது செய்தனர்.

ஆசிரியர் - Editor