வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானாரா விஜய்?- அங்கு நடந்தது என்ன?

வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானாரா விஜய்?- அங்கு நடந்தது என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதனால் ரசிகர்கள் பரபரப்பாக பின் கடைசியில் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றவில்லை என அந்த அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டனர்.

இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பை தொடங்கினார். மற்ற 2 இடங்களில் கைப்பற்றதை விசாரிக்க பைனான்சியர், தயாரிப்பு நிறுவனம், விஜய் மூவருக்கும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

தற்போது அன்புச் செழியன், விஜய் தரப்பில் அவர்களது ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி, தங்கள் தரப்பு விவரங்களை பிரமாண பத்திரமாக அளித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் சில தகவல்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆசிரியர் - Editor