நன்றி தெரிவித்த சாய்பல்லவி

நன்றி தெரிவித்த சாய்பல்லவி

‘போர்ப்ஸ்’ இந்தியா வெளியிட்டுள்ள அண்மைய பட்டியலில் நடிகை சாய்பல்லவியின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

‘30 அண்டர் 30’ என்ற தலைப்பின் கீழ் முப்பது பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ‘போர்ப்ஸ்’. 

இதில் வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இடம்பெறவில்லை என்பதுடன் மொத்தம் ஐந்து பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சாய்பல்லவிக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’, ராணாவுடன் ‘விரத பர்வம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சாய்பல்லவி ’போர்ப்ஸ்’ இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னை ‘போர்ப்ஸ்’ பெருமைப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor