வீட்டில் இருந்த​ பெண்ணை தாக்கி கொள்ளை!

வீட்டில் இருந்த​ பெண்ணை தாக்கி கொள்ளை!

பதுளை, தன்தென போலியத்த பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் படுகாயமைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தப்பிச் சென்ற கொள்ளையர்களை தேடி பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதுகாப்பு கெமரா காட்சிகள் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த கொள்ளையர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor