இனி ஓட்டு வீடுகளே அமைக்கப்படும்!

இனி ஓட்டு வீடுகளே அமைக்கப்படும்!

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வீட்டுத் திட்டங்களுக்கும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஓடுகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் 14,022 வீடுகள் கட்டப்படவுள்ளதாக வீட்டுவசதி அபிவிருத்தி ஆணைக்குழுவின் தலைவர் ரேணுகா துஷ்யந்த இன்று (13) தெரிவித்தார்.

உள்ளூர் ஓட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதும், மக்களுக்கு சிறந்த காற்றோட்டத்தை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம் என்றார்.

இதன் மூலம், ஓட்டுத் தொழில் மீண்டும் வலிமை பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றார்.

வீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான ஓடுகளைப் பெறுவதற்காக ஓட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

ஆசிரியர் - Editor