1000

சிறுமியை தாக்கிய இருவருக்கும் பிணை!

சிறுமியை தாக்கிய இருவருக்கும் பிணை!

13 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலராக பெண் உத்தியோகத்தர், அவரது சகோதரி ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க, நிக்கரவெட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் 26ம் திகதி மீள அவர்களை மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியை தொடர்ந்தும் சிறுவர் இல்லத்திலேயே தங்க வைக்க உத்தரவிட்டார்.

அளுத்கம, கொட்டவெஹெரவை சேர்ந்த கிராம அலுவலர் டி.எம்.மானெல் ரத்னகுமாரி, சிறுமியின் தாயரான அவரது சகோதரி டி.எம்.நில்மினி ரத்னகுமாரி ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சிறுமிக்கு இடையூறு அல்லது விசாரணையில் தலையிடு செய்யக்கூடாது என்றும், அதை மீறினால் பிணை இரத்துச் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கடுமையாக அவர்களை எச்சரித்தது.

ஆசிரியர் - Editor