1000
590

சீனாவையே மிஞ்சிய சுவிட்சர்லாந்து?

சீனாவையே மிஞ்சிய சுவிட்சர்லாந்து?

சுவிட்சர்லாந்தை பொருத்தவரையில், மார்ச் 10ஆம் திகதி மதிய நிலவரப்படி, 507 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டார்கள், 3 பேர் குணமடைந்துள்ளார்கள்.

கொரோனா தொற்று வீதத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, (அதாவது, இவ்வளவு மக்கள் தொகையில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்று கணக்கிடுவது தொற்று வீதம் ஆகும்), சுவிட்சர்லாந்து சீனாவையே மிஞ்சிவிட்டது.

தங்கள் நாட்டின் தொற்று வீதம் இவ்வளவு அதிகம் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து, சுவிட்சர்லாந்து நாட்டு சுகாதாரத்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலை வெளியிடுவதையே நிறுத்திவிட்டது.

அதுபோக, அதிக அபாயத்திலிருப்பவர்கள் என கருதப்படுவோருக்கு மட்டுமே இப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா போன்ற அறிகுறிகள் உள்ள மற்றவர்கள், வீட்டிற்குள் இருந்துகொண்டு தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் வெளியாகியுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விட மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தையும் தாண்டி கொரோனா தொற்று வீதத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள், இத்தாலியும் தென் கொரியாவும் ஈரானும் ஆகும்.

சுவிட்சர்லாந்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு 60 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

அதுவே சீனாவில் ஒரு மில்லியனுக்கு 58 பேர்தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆனால், இத்தாலியில் ஒரு மில்லியனுக்கு 152 பேரும், தென்கொரியாவில் 147 பேரும், ஈரானில் 99 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor