1000
590

சுவிஸில் பணத் தாள்களை வாங்க மறுக்கும் விற்பனையாளர்கள்:

சுவிஸில் பணத் தாள்களை வாங்க மறுக்கும் விற்பனையாளர்கள்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் சில்லறை விற்பனையாளர்கள் பணத் தாள்களை வாங்க மறுத்து வருகின்றனர்.

உங்களுக்காகவும், உங்கள் சுகாதாரத்திற்காகவும் வங்கி அட்டைகளை மட்டும் பயன்படுத்தவும் என்ற கோரிக்கை தற்போது பெர்ன் மண்டலத்தில் வலுத்து வருகிறது.

இந்த கோரிக்கையானது கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் எனவும்,

இருப்பினும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கி அட்டையையே பணம் செலுத்த பயன்படுத்தி வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பணத் தாள்கள் வாயிலாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளதால் பெர்ன் மண்டல விற்பனையாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

சீனாவில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் பணத் தாள்கள் அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor