1000

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 10 பில்லியன் நிதி: சுவிஸ் அரசு முடிவு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 10 பில்லியன் நிதி: சுவிஸ் அரசு முடிவு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கி உதவ சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டிவிட்ட நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Simonetta Sommaruga, இது கடினமான சூழல் என்று தெரிவித்தார்.

கொரோனா சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் பணி வழங்குவோருக்கு, 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அரசு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேலையில்லாத்திண்டாட்டம் தொடர்பான தேவைகளுக்காக எட்டு பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தள்ளி வைக்கப்பட்டுள்ள மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக 50 மில்லியன் ஃப்ராங்குகள் வரை வழங்கப்பட இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor