1000
590

நம் நாடு ஒரு பணக்கார நாடு... யாரையும் கைவிடமாட்டோம்.. பயம் வேண்டாம்: மக்களை தைரியப்படுத்தும் சுவிஸ் அரசு!

நம் நாடு ஒரு பணக்கார நாடு... யாரையும் கைவிடமாட்டோம்.. பயம் வேண்டாம்: மக்களை தைரியப்படுத்தும் சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்தில் ஒரே இரவில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள நிலையில், நம் நாடு ஒரு பணக்கார நாடு, யாரையும் கைவிடமாட்டோம், ஆகையால் யாருக்கும் பயம் வேண்டாம் என மக்களை தைரியப்படுத்தும் நடவடிக்கைகளில் சுவிஸ் அமைச்சர்களும் அதிகாரிகளும் இறங்கியுள்ளனர்.

யாரும் பயத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சுவிஸ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, மக்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும், இணைந்து கொரோனாவை எதிர்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஞாயிறு நிலவரப்படி கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1,000 உயர்ந்து 2,200 ஆகியுள்ளதுடன், 14 பேரை பலிகொண்டுள்ளது.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் ஜனாதிபதியான Simonetta Sommaruga, நாம் இந்த நெருக்கடியை மருத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேற்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம் என்றார். சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடு, யாரையும் கைவிடமாட்டோம் என்றார் அவர்.

ஆசிரியர் - Editor