1000
590

நமிதாவை தவறான எண்ணத்துடன் அழைத்த நபர்!

நமிதாவை தவறான எண்ணத்துடன் அழைத்த நபர்!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமிதா.

இதற்கு முன்பு இவர் தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின், பல தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த விளங்கினார்.

மேலும் தல அஜித்தின் பில்லா, தளபதி விஜய்யின் அழகிய தமிழ் மகன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் இணைந்து நடித்து வந்தார்.

நடிகை நமிதாவுக்கு 2017ஆம் ஆண்டு வீரேந்தர் சவுதிரி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

நமிதா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் இனைந்து இருப்பதற்காக சில புகைப்படங்களையும் அவ்வப்போது சில வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் யாரோ ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் சில மோசமான வார்த்தை பயன்படுத்தி மிரட்டி அழைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது அந்த நபரின் பெயர் உட்பட அந்த நபரின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நமிதா.

இதனுடன் அந்த பதிவில் “நான் திரைத்துறையில் இருப்பதினால் இப்படி கேட்டானா? அல்லது நான் கவர்ச்சியாக நடிப்பதினால் இப்படி கேட்டானா? என்றும் மண வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் நடிகை நடிகை நமிதா.

ஆசிரியர் - Editor