1000
590

இன்­னொரு மனி­தனை நம்­பு­வ­தற்கு வாழ்த்­து­கள் நண்பா - காயத்ரி

இன்­னொரு மனி­தனை நம்­பு­வ­தற்கு வாழ்த்­து­கள் நண்பா - காயத்ரி

ரசி­கர்­க­ளைப் போலவே கோடம்­பாக்க கலை­ஞர்­களும் சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் மோதிக்­கொள்­வது சாதா­ர­ண­மாகி விட்­டது. அந்த வகை­யில் தற்­போது விஜய் சேது­பதி, காயத்ரி ரகு­ராம் இடை­யே­யான மோத­லுக்கு சமூக வலைத்­த­ளங்­கள் தயா­ராகி வரு­கின்­றன.

‘மாஸ்­டர்’ இசை வெளி­யீட்­டில் விஜய் சேது­பதி பேசி­ய­து­தான் இந்­தப் புதிய சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது. அந்­நி­கழ்­வில் பேசிய சேது­பதி கொரோ­னாவை விட தற்­போது இன்­னொரு வைரஸ் வேக­மாக பரவி வரு­கிறது என்­றும், சாமிக்­காக எல்­லோ­ரும் சண்டை போட்­டுக் கொள்­வது ஏன் என்று தமக்­குப் புரி­ய­வில்லை என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“சாமி­யையே காப்­பாற்­றக்­கூ­டிய மகா மனி­தனை எந்­தச் சாமி­யும் இன்­னும் படைக்­க­வில்லை. சாமியே தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்­ளும். எனவே சாமி­யைக் காப்­பாற்­று­கி­றேன் என்று கூறும் கூட்­டத்­தோடு பழ­கா­தீர்­கள்,” என்­றும் சேது­பதி அந்­நி­கழ்­வில் பேசி­யி­ருந்­தார். 

மேலும், “மதத்­தைச் சொல்லி கட­வு­ளைப் பிரிக்­கப் பார்க்­கி­றார்­கள். மனி­த­னுக்­கும் கட­வு­ளுக்­கும் இடை­யில் மதம் கிடை­யாது,” என்­றார் விஜய் சேது­பதி. 

இந்­நி­லை­யில் இதற்­குப் பதி­லடி கொடுத்­துள்­ளார் நடிகை காயத்ரி ரகு­ராம். 

தாம் மனி­தனைவிட கட­வு­ளைத்­தான் அதி­கம் நம்­பு­வ­தாக அவர் டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். 

வாழ்க்கை கட­வு­ளால்­தான் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும், ஒரு மனி­த­னின் வெற்றி என்­பது கட­வு­ளின் கையில்­தான் உள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இன்­னொரு மனி­தனை நம்­பு­வ­தற்கு வாழ்த்­து­கள் நண்பா. எந்த நம்­பிக்­கை­யை­யும் நம்­மால் அழிக்க முடி­யாது. எல்லா மதத்­தி­லும் கோடிக்­க­ணக்­கி­லான நம்­பிக்­கை­யா­ளர்­கள் உள்­ள­னர். நாங்­கள் எல்­லாம் ஊமை­கள் என்று நினைத்­தீர்­கள் எனில், மன்­னித்து விடுங்­கள்.

“இறு­தி­யில் பொய் சொல்­லக்­கூ­டிய, வெறுக்­கக்­கூ­டிய மற்­றொரு மனி­தனை நீங்­கள் நம்­பு­வ­தற்­காக வருந்­து­கி­றேன். ஒரு மனி­தன் மூலம்­தான் இன்­னொரு மனி­த­னுக்கு வெற்றி கிடைக்­கும் என்­பது பொய். மனி­த­னின் வெற்றி கட­வுள் கையில்­தான் உள்­ளது. எனவே, மனி­தனைவிட கட­வுளை அதி­கம் நம்­பு­கி­றேன்,” என்று காயத்ரி ரகு­ராம் தமது பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார். 

அவர் இவ்­வாறு பதி­விட்­ட­துமே கோடம்­பாக்­கத்­தில் பர­ப­ரப்பு பற்­றிக் கொண்­டது. 

சேது­ப­திக்குக் கண்­ட­னம் தெரி­வித்­த­தாக தக­வல் பர­வி­யது. எனி­னும் இதற்கு உட­னுக்­கு­டன் மறுப்பு தெரி­வித்­தார் காயத்ரி. தாம் விஜய் சேது­ப­தி­யின் பேச்­சைக் கண்­டிக்­க­வில்லை என்­றும், அனை­வ­ரும் சுதந்­தி­ர­மா­கப் பேசு­வ­து­தான் ஜன­நா­ய­கம் என்­றும் அவர் மற்­றொரு பதி­வில் குறிப்­பிட்­டார்.

“நான் சேது­ப­தி­யின் கருத்­தோடு ஒத்­துப் போக­வில்லை. அது என்­னு­டைய சுதந்­தி­ரம். அவர் கட­வுளை நம்­பு­வதை எல்­லோ­ரும் நிறுத்­த­வேண்­டும் என்று சொல்­ல­வில்லை. கட­வுள் நம்­பிக்­கை­யா­ளர்­களை நம்­பு­வதை நிறுத்­த­வேண்­டும் என்­று­தான் கூறி­யுள்­ளார். மதச்­சார்­பின்மை என்ற பேரில் பகுத்­த­றி­வா­ளர்­கள் சேது­ப­தி­யின் பேச்சை விரும்­பு­வார்­கள்,” என்று காயத்ரி குறிப்­பிட்­டுள்­ளார்.

 

ஆசிரியர் - Editor