1000
590

அஜித்தை தொடந்து நடிகர் சூர்யாவும் இந்த வேடத்தில் நடிக்கவுள்ளாரா

அஜித்தை தொடந்து நடிகர் சூர்யாவும் இந்த வேடத்தில் நடிக்கவுள்ளாரா

தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா, தனது படங்களில் வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.

சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான என்.ஜி.கே, காப்பான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும், இவரின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் வெளியாக உள்ளது.

அதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா, மேலும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான கூட்டத்தில் திரைப்படத்தை இயக்கிய டி.ஜே,ஞானவேல் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என சொல்ல படுகிறது.

மேலும், இருளர் பழங்குடியினரின் வாழ்கை பிரச்சனைகளை வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் - Editor