1000
590

விவசாயிகளின் பிரச்சினைகளை பேசும் ‘பூமி’

விவசாயிகளின் பிரச்சினைகளை பேசும் ‘பூமி’

விவ­சா­யத்தை மைய­மாக வைத்து உரு­வா­கிறது ‘பூமி’. ஜெயம் ரவி நாய­க­னாக நடிக்­கி­றார். அவ­ருக்கு ஜோடி நிதி அகர்­வால். 

இமான் இசை­ய­மைக்க, லட்­சு­மண் இயக்­கும் படம் இது. இவர் ஏற்­கெ­னவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’, ‘ரோமியோ ஜூலி­யட்’ உள்­ளிட்ட படங்­களை இயக்­கி­ய­வர். 

ஜெயம் ரவி  செவ்­வாய் கிர­கத்தை ஆராய்ச்சி செய்­யும் நாசா விஞ்­ஞா­னி­யாக நடித்­துள்­ளா­ராம். ஆய்­வு­களில் தீவிர கவ­னம் செலுத்தி வரும் அவர், ஒரு கட்­டத்­தில் சொந்த ஊரான தஞ்­சா­வூ­ருக்கு திரும்பி வரு­கி­றார். அங்கு நடக்­கும் சில சம்­ப­வங்­க­ளால் பாதிக்­கப்­படும் அவர், விவ­சா­யத்­தைக் காப்­பாற்ற களம் இறங்­கு­கி­றார். 

இதை­ய­டுத்து அவ­ருக்­குத் திடீ­ரென பிரச்­சி­னை­கள் முளைக்­கின்­றன. எனி­னும் அவை அனைத்­தை­யும் எதிர்த்து நின்று போரா­டு­ப­வ­ரின் லட்­சி­யம் நிறை­வே­றி­யதா என்­கிற ரீதி­யில் கதை நக­ரு­மாம்.

“இந்­தியா அதிக மக்­கள் தொகை கொண்ட நாடு. இங்கு அனை­வ­ருக்­கும் அத்­தி­யா­வ­சி­யத் தேவை­யாக இருப்­பது உண­வு­தான். ஆனால் அந்த உணவை உற்­பத்தி செய்­யும் விவ­சா­யி­க­ளுக்கு நம் சமூ­கத்­தில்  உரிய முக்­கி­யத்­து­வம் கிடைப்­ப­தில்லை.

“இந்­தப் படம் முழுக்க முழுக்க விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிப் பேசும். அது­மட்­டு­மல்ல, அந்­தப் பிரச்­சி­னைக்­கான தீர்­வை­யும் சொல்லி இருக்­கி­றோம். விவ­சா­யக் கதை­யாக இருந்­தா­லும் வணிக ரீதி­யி­லான விஷ­யங்­களும் இருக்­கும். 

“குறிப்­பாக நாய­க­னுக்­கும் வில்­ல­னுக்­கும் இடை­யே­யான மோதல் மிரள வைக்­கும். சண்­டைக் காட்­சி­களை அதி­ர­டி­யாக, விறு­வி­றுப்­பாக அமைத்­துள்­ளோம். மொத்­தத்­தில் ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்தி செய்­யும் பட­மாக ‘பூமி’ இருக்­கும்,” என்கி­றார் லட்­சு­மண். 

படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம்.

ஆசிரியர் - Editor